• Dec 26 2024

மீண்டும் விஜய்யைச் சீண்டிய ரஜினிகாந்த், வேட்டையன் டீஸரில் இதை கவனித்தீர்களா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170-ஆவது படத்தின், டைட்டில் இன்று, தலைவரின் 170-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்று முன்னர், இந்த படத்தின் டைட்டில் 'வேட்டையன்' என அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தை'ஜெய்பீம்' படத்தின் மூலம் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற, இயக்குநர் தா/செ.ஞானவேல் இயக்குகிறார்.

 நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கழுகு உயரமாக பறக்கும், அதற்கு ஈடாக காக்கா பறந்து முயற்சித்து கொத்த வரும், ஆனால் கழுகு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே பறக்கும் என பேசினார்.


இதனால் விஜய்யைத் தான் ரஜினி சொல்கின்றார் என தளபதி ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். அதன் பின் லியோ பட வெற்றி விழாவில் விஜய்யும் 'காக்கா-கழுகு' என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனாலும் விஜய் இறுதியில் 'ஒரே உலகநாயகன்.. ஒரே சூப்பர்ஸ்டார்.. ஒரே தல.. எனக்கு ரசிகர்கள் கொடுத்த தளபதி பட்டம் போதும்' என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படத்தின் டீஸர் வெளிவந்து இருக்கிறது. அதில் 'குறி வெச்சா இரை விழணும்' என ரஜினி பேசும்போது பின்னணியின் கழுகு bgm வருகிறது. இதனால் கண்டிப்பாக விஜய்யைத் தான் ரஜினி சீண்டுகின்றார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement