• Dec 26 2024

பிரவுன்மணி உடைத்த உண்மைகள்.. பயத்தின் உச்சத்தில் ரோகிணி! விறுவிறுப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவிடம் இருந்து தப்பிய மலேசிய மாமா நேராக ரோகிணியின் கடைக்கு வருகின்றார். இவரைப் பார்த்து ரோகினியும் வித்யாவும் அதிர்ச்சி அடைய, மீனா துரத்திக் கொண்டு வந்த விஷயத்தை சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் மீனாவை வர சொல்லி இருப்பதை நினைத்து ரோகிணி பயப்பட, மீனாவும் வந்து விடுகின்றார். அதற்கு பிறகு வித்யா மலேசியா மாமாவுடன் ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள, ரோகிணி பூவை வாங்கிக் கொண்டு மீனாவை வாசலோடு அனுப்பி வைக்க நினைக்கின்றார். ஆனால் மீனா நான் போட்டோவுக்கு பூ போட்டு விடுகிறேன் என்று உள்ளே வருகின்றார்.

இதனால் ரோகிணி பதட்டத்துடன் இருக்க, வெளியில் போன மனோஜ் கடைக்கு வருகின்றார். இதனால் இன்னும் பதற்றம் அதிகமாக, அங்கு முத்துவும் செல்வத்தோடு கடைக்கு வருகிறார். இதனால் பயத்தின் உச்சத்தில் ரோகினி திணறுகிறார்.


இதைத் தொடர்ந்து மலேசிய மாமா இவர்கள் நாடகமாடியதை தெரிந்து கொண்டு, எனக்கு வாய்ப்பு வாங்கி தாரது என்று சொன்னது, கிராமத்துக்கு வர சொன்னது, திரும்ப வீட்டுக்கு வர சொன்னது எல்லாம் உங்க பிரச்சனைக்கு தானே.. என்ன நடிக்க  வச்சு பயன்படுத்திட்டிங்க..  ஆனா என்னால உனக்கு நல்லது நடக்கும் என்றால் என்ன அது எனக்கு சந்தோசம் தான். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன் என சொல்லிச் செல்கிறார் மலேசியா மாமா.

இறுதியாக மலேசியா மாமாவை பார்த்த விஷயத்தையும், ரோகிணியிடம் அதைப் பற்றி பேசியபோது அவருடைய முகம்  மாறியதையும் பற்றி மீனா முத்துவிடம் சொல்ல, அந்தப் பார்லர்  அம்மா ஏதோ வில்லங்கமா பண்ணிக்கிட்டு இருக்கு. ஆரம்பத்துல இருந்தே எனக்கு சந்தேகமா இருக்கு என இவர்கள் பேச, அதை ஒட்டுக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement