• Dec 26 2024

அச்சு அசலாக அஜித் போலவே இருக்கும் யாஷிகா ஆனந்த் அப்பா.. என்னென்ன சேட்டை பண்றாரு பாருங்க..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தந்தை பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவரது தந்தை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக அவர் அஜித் போலவே இருக்கிறார் என்று கூறி  வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், அதன்பின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் நான்கு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் அதில் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார் என்பதும் சில நேரம் அவரது பதிவுகள் அத்துமீறியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவின் தந்தை அச்சு அசலாக அஜித் போலவே இருக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் சில கமெண்ட்களில் யாஷிகாவின் தந்தைக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். யாஷிகா போன்ற ஒரு அழகியை இந்த உலகிற்கு தந்ததற்கு நன்றி எனவும் ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் உள்ள ஒரு வீடியோவில் யாஷிகாவின் அப்பா தலையில் ஒரு கிளாஸ் வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுவது, சுருட்டு பிடிப்பது மற்றும் மொட்டை மாடியில் பட்டாசு வெடிப்பது ஆகிவற்றை பார்க்கும்போது பெருசு இந்த வயதில் என்ன சேட்டை பண்றது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

முதல் முதலாக யாஷிகா ஆனந்த் தனது அப்பா, அம்மா, சகோதரி மற்றும் சகோதரருடன் இணைந்த குடும்ப படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுகளுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் யாஷிகா இந்த பதிவில் ’என் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்.  பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் எப்போதும் உங்களுடைய வசீகரமான தோற்றம் என் கண்களில் எப்போதும் இருக்கும்.    ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் கேட்கும் முன்னரே, எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்ததற்கு நன்றி. என்னை விமர்சனம் செய்யும் முதல் நபர் என் அப்பா தான்.   இந்த நினைவுகள் என் வாழ்நாள் முழுவதும் எனக்கு இருக்கும்’ என எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement