• Dec 27 2024

பொறி வலைக்குள் தானாக சிக்கிய ரோகிணி.. விரட்டிச் சென்ற முத்து! அதிர்ச்சியில் விஜயா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மீனாவும் ஸ்ருதியும் கிச்சனின் பேசிக் கொண்டிருக்க அதை வெளியில் இருந்து விஜயா கேட்கிறார். இதன் போது ஸ்ருதி எனக்கு உங்களைப் போல பொறுமையாக இருக்க முடியாது. அத்தை என்ன எதுவும் சொன்னா அவங்களுக்கு சூடு வைப்பேன் என சொல்லுகிறார். இதை கேட்டதும் விஜயா ஷாக் ஆகிறார். மேலும் ஸ்ருதி  போன பின்பு உனக்கு ஆள் சேக்குறியா? எனக்கு எதிரா ஸ்ருதியை தூண்டி விடுறியா? என்று மீனாவுக்கு திட்டுகிறார் விஜயா.

மறுபக்கம் ரோகினி கடைக்கு வந்த பிஏ, தனக்கு கல்யாணத்திற்கு சீர் வேணும் என்று டிவி, பிரிச், வாஷிங் மெஷின் என்று  சாமான்களை தருமாறு கேட்கின்றார். ஆனாலும் ரோகிணி தர முடியாது என்று சொல்லவும் மனோஜிடம் உண்மையை சொல்லுவதாக மிரட்டுகிறார். இதனால் சாமான்களை எல்லாம் கொடுத்து அனுப்புகிறார் ரோகிணி.

அந்த நேரத்தில் வந்த மனோஜ் நல்ல கலெக்ஷன் வந்து இருக்கு போல என கேட்டு, காசை செக் பண்ண காசு இல்லை. இதனால் ரோகிணி அவங்க இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கிட்டு போனதாக சொல்லுகிறார். ஆனால் எப்படி அவரை நம்பி இத்தனை சாமான்களை கொடுத்த எனக் கேட்க, மனோஜ் மீது கோபப்படுவது போல கோபப்பட்டு எஸ்கேப் ஆகிறார் ரோகினி.


அதன் பின்பு வித்தியாவை அழைத்து பிஏக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, சிட்டியிடம் செல்கிறார்கள். அங்கு பிஏவின் போட்டோவை காட்டி அவரை மிரட்டி வைக்குமாறு ரோகிணி சொல்லிவிட்டு போகிறார். சிட்டியும் ரோகினியை வைத்து தான் காய் நகர்த்த வேண்டும் என்று இதனை செய்து தருவதாக சொல்லுகிறார்.

அதன் பின்பு பிஏ வை போன் பண்ணி சிட்டியின் இடத்திற்கு வர வைக்கிறார்கள். அங்கு வந்ததும் சிட்டி அவரை அடிக்கின்றார். ஆனாலும் ஒன்றும் புரியாமல் இறுதியில் பிஏ எஸ்கேப்பாகி பைக் எடுத்து ஓட, சிட்டியும் அவரை விரட்டிக் கொண்டு பின்னாலே செல்கிறார்.

இன்னொரு பக்கம் செல்வமும் முத்துவும் வந்து கொண்டிருக்க, பிஏ வேகமாக வண்டியை கொண்டு வந்து பாட்டி ஒருவர் மீது மோதி விட்டு செல்கிறார். இதனால் முத்துவும் பிஏ வை விரட்டிக்கொண்டு பின்னால் செல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement