சின்னத்திரை சீரியல்களுக்குள் மத்தியில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை சல்மா அருண். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடித்து ஒரு குழந்தையும் உள்ளது. இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ரோலில் காணப்பட்டாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு கேரக்டராக ரோகிணியின் கேரக்டர் காணப்படுகின்றது.
நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் கிராமப்புறங்களிலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றார்கள். அதிலும் சல்மா அருண் குறித்த தகவல்களை இணையத்தில் அதிகளவானோர் தேடி வருகின்றனர்.
இந்த சீரியலில் தற்போது ரோகினியின் ரகசியங்கள் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்பட்டு வருகின்றது. ஜீவா கொடுத்த 30 லட்சம் காசை வைத்து தான் இவர்கள் ஷோரூம் ஆரம்பித்தார்கள் என்ற உண்மை தெரிய வரவே ரோகினிக்கு சரமாரியாக அறைந்தார் விஜயா.
மேலும் சிட்டியிடம் அடிக்கடி பணம் வாங்கும் விடயமும் மீனா, முத்துவுக்கு தெரிந்து விட்டது. இன்னும் கிரிஷ் பற்றிய ரகசியம் தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதுவும் எப்போது உடையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், சல்மா அருண் தனது குடும்பத்துடன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை ரசிகர்களுக்கும் பகிர்ந்து உள்ளார். குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!