• Dec 25 2024

இஷ்டத்துக்கு பொய்களை அடுக்கிய மனோஜால் ரோகிணிக்கு கிடைத்த பெரிய கிப்ட்..! அடிபொலி தான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ஏற்பாடு பண்ணியபடி எல்லோரும் ரெடியா இருக்க மும்பையில் இருந்து அந்த பிசினஸ் மேன் வருகின்றார். அவரை போக்கே கொடுத்து வரவேற்கின்றார் மனோஜ்

அதன் பின்பு தான் நிறைய படித்திருப்பதாகவும் நிறைய டிகிரி எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றார். பிறகு முத்துவை அறிமுகம் செய்து வைக்கின்றார். ஆரம்பத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியது முத்துவுக்கு விளங்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி சமாளித்து தான் 50 காருக்கு ஓனர் என்றும் விரைவில் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பிசினஸை விரிவு பண்ண இருப்பதாகவும் சொல்கின்றார்.

அதன் பின்பு மீனா பூந்தோட்டம் வைத்து பூ பிசினஸ் செய்வதாக சொல்ல, அதைப்பற்றி விசாரிக்கின்றார். அதற்கு உடனே மீனா எத்தனை முழம் பூ வேணும் என்று சொல்லுங்கள் இப்பவே கட்டித் தருகிறேன் என்று உளறி வைக்கின்றார். ஆனாலும் முத்து ஸ்டாப்ட சொல்லிக் காட்டி தருவாங்க என்று சமாளிக்கின்றார்.

அதன் பின்பு ரவி, ஸ்ருதியைஅறிமுகம் செய்து வைக்கின்றார். மேலும் ஸ்ருதி  ஸ்டூடியோ வைத்திருப்பதாகவும் அடித்து விடுகிறார் மனோஜ். விஜயாவும்  டான்ஸ் அகாடமி வைத்திருப்பதாக சொல்லுகின்றார்.


இறுதியில்   ரோகினி மனோஜ் கேக் கட் பண்ணி தமது திருமண நாளை  கொண்டாடுகிறார்கள். இதன்போது அண்ணாமலை தனது குடும்பத்தை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த நேரத்தில் பிசினஸ் மேன் ரோகிணி மனோஜ்க்கு கிப்ட் ஒன்று கொடுத்துவிட்டு இன்னொரு கிப்ட் கொடுக்கப் போவதாக சொல்கிறார். அதன்படி மனோஜ்க்கு தான் வந்ததற்கான பிசினஸை கொடுப்பதாக சொல்லுகின்றார். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.

இறுதியில் மீனா வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்ல, முத்து இழுத்து அடிக்கிறார். ஆனாலும் விஜயா அண்ணாமலை கிளம்பிச் செல்ல அவர்களுடன் இவர்களும் செல்ல ஆயத்தம் ஆகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement