• Dec 26 2024

ரொம்ப கேவலமா புருஷன ஏமாத்துறீங்க ரோகிணி..! மீனா போட்ட போடில் செல்வம் எடுத்த முடிவு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மனோஜ் ரோகினி கேட்ட காசை வட்டிக்கு கொடுப்பதற்கு ஒத்துக் கொள்கிறார். அதன்படி ஒரு லட்சத்திற்கு 3000 படி வட்டிக்கு  தருவதாக சொல்லுகின்றார்.

மறுநாள் கடையில் வைத்து ரோகினிக்கு மனோஜ் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து ஆதாரத்திற்கு லெட்டரில் சைன் வாங்கி எடுக்குமாறு சொல்லுகிறார். அந்த நேரத்தில் வித்யா அழுதுகொண்டே கடைக்கு வருகின்றார். ரோகிணி என்ன விஷயம் என்று கேட்கவும், ஊரில் உள்ள தனது அம்மாவுக்கு திடீரென ஆப்ரேஷன் அதற்கு 75,000 வேண்டும் தன்னிடம் பணமில்லை என்று அழ, ரோகினி  தன்னிடமும் பணம் இல்லையே என பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதை கேட்ட மனோஜ் ரோகிணியை அழைத்து தான் பணம் தருவதாக சொல்ல, முதலில் ரோகிணி எங்களுக்கே நிறைய செலவு இருக்குது என்று சொல்லுகின்றார். ஆனாலும் இந்த நேரத்தில் ஹெல்ப் பண்ண வேண்டும் தானே என்று மனோஜ் சொல்லுகின்றார். அதன்படி வித்யாவுக்கு காசு கொடுக்கின்றேன் ஆனால் வட்டி விஷயத்தை நீயே கதைத்து விடு என்று சொல்லுகிறார்.


அதன்படி வித்யாவின் அக்கவுண்டுக்கு காசை போட்டு விடுகின்றார். இறுதியில் கீழே வந்த வித்யாவும் ரோகிணியும்  விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். ரோகிணி போட்ட பிளான் படி ஒரு லட்சம் ரூபாய் வீட்டு வாடகைக்கும் 75 ஆயிரம் ரூபாய் க்ரிஷின்  ஸ்கூலுக்கும் கட்டி விடுமாறு சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் மீனா செல்வத்தை பார்த்து, ஒரு சில விஷயம் தங்கச்சியா நான் உங்ககிட்ட சொல்லணும்.. நானும் நீங்களும் கஷ்டப்பட்டு தான் வந்தோம்.. நாளைக்கு கடன் வாங்கினால் அதை பல மாசம் கஷ்டப்பட்டு தான் கட்டணும் என்று செல்வத்திற்கு புத்திமதி சொல்லிவிட்டு செல்கிறார்.

அதன் பின்பு முத்துவின் நண்பர்களும் மீனாவுக்கும் முத்துவுக்கும்  இடையில் பிரச்சனை போவதை பற்றி சொல்ல, தன்னால் எந்த பிரச்சனையும் வேண்டாம். இந்த பங்சனை தான் செய்யப் போவதில்லை என்று சொல்கின்றார். அதன் பின்பு முத்து காசு கொடுக்கவும் அதை வாங்க மறுக்கிறார் செல்வம். இதனால் என்ன நடந்தது என்று விசாரிக்கின்றார் முத்து. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement