• Dec 25 2024

பிரச்சினையோடு அழுது புலம்பிய சத்யா.. தீர்த்து வைப்பாரா முத்து?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் இன்றைய எபிசொட்டில், ரோகினியின் அம்மா முத்து மீனாவை அசிங்கப்படுத்திவிட்டு வெளியில் வந்து அழுகின்றார். மீனா உள்ளே இருந்து அழுது கொண்டு இருக்க, அண்ணாமலை அவர்களை சமாதானப்படுத்தி வேறு வேலையை பார்க்குமாறு சொல்லுகின்றார்.

மறுபக்கம் வித்யா வீட்டில் ரோகிணியின் அம்மாவும் க்ரிஷும்  இருக்க, ரோகிணியின் அம்மா இரண்டு நல்ல மனிசங்களை  நோகடிச்சுட்டன். இந்த பாவம் என்ன சும்மா விடாது என அழுகிறார். அந்த நேரத்தில் ரோகினி வந்து உன்ட பிள்ளையிட வாழ்க்கைய  காப்பாற்றினேன் என்று சந்தோஷப்படு என்று அவருக்கு திட்டுகிறார்.

ஆனாலும் நீ பொய்ய தான் அத்திவாரமாக கொண்டு வாழ்க்கையை தொடங்கியிருக்கா, அது உன்ன சும்மா விடாது இந்த பாவமும் உன்னை சும்மா விடாது என்று சொல்லுகின்றார் ஆனால் ரோகிணி அவற்றை கணக்கெடுக்காமல் வீடு பார்த்தாச்சு, க்ரிஷ ஸ்கூல்ல சேர்த்தாச்சு அடுத்த கிழமை இருந்து ஒன்னா இருப்போம் என்று சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் இருந்து மீனா அழுது கொண்டிருக்க அவரை முத்து சமாதானப்படுத்துகின்றார். மொட்டை மாடிக்கு வந்த ரோகிணி, இவர்கள் கதைத்துக் கொண்டிருப்பதை நடுவில் நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த இடத்திற்கு விஜயா வரவும், போனில் சிக்னல் இல்லாதது போல மேலே வருகின்றார்.


அப்போது விஜயா தான் இன்னைக்கு தான் சந்தோஷமாக இருப்பதாக சொல்லுகின்றார். மேலும் என்ட வீட்டில என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்ல, மீனா அவரிடம் மன்னிப்பு கேட்கின்றார்.

இதை தொடர்ந்து முத்து மீனாவை அவருடைய அம்மா வீட்டுக்கு கூட்டிப் போக மீனா நடந்துவற்றை சீதாவிடம் சொல்லுகின்றார். அந்த நேரத்தில் சத்யா தன்னை எக்ஸாம் எழுத வேண்டாம் என்று பிரின்ஸ்பல் சொன்னதாக அழுகின்றார். ஆனால் முத்து அழவேண்டாம். தான் அவருடன் கதைத்து எக்ஸாம் எழுத வைப்பதாக நம்பிக்கை கொடுக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement