• Dec 25 2024

கையில் இரத்தம் வழிய வழிய ஐஸ்வர்யா ராஜின் வீட்டுக்கதவை தட்டிய சல்மான் கான்- வெளிவந்த நீண்ட நாள் ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இப்படத்தில் இவருடைய அழகும் நேர்த்தியான நடிப்பும் பலரைக் கவர்ந்ததோடு இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில்  ஜீன்ஸ்,  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மீண்டும்  எந்திரன், ராவணன் ,கடைசியாக பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிகர் அபஷேக் பச்சனை திருமணம் செய்துள்ளதோடு ஒரு மகளும் இருக்கின்றார்.


இவர்  அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்தார். இருவரது காதலும் பாலிவுட் முழுக்க தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் தீவிரமாக காதலித்தார்கள். ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார் சல்மான் கான். 

ஆனால் அந்த சமயத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய கரியரின் பீக்கில் இருந்ததால் திருமணத்துக்கு இசையவில்லை. இருந்தாலும் காதல் குறையவில்லை. அப்போது சல்மான் கானுக்கு எதிரானவர்கள் ஐஸ்வர்யா ராயிடம் சென்று கண்டதையெல்லாம் சொல்லி மனதை குழப்பினார்கள். ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா ராயும் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்.


அப்போதுதான் ஐஸ்வர்யா ராய் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு நள்ளிரவில் சென்று கதவை தட்டிவிட்டார். ஆனால் ஐஸ்வர்யாவோ கதவை திறக்கவில்லை. தொடர்ந்து கோபத்துடன் தட்ட தட்ட சல்மான் கானின் கையில் ரத்தம் எல்லாம் வந்துவிட்டது. பிறகு கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் ஐஸ்வர்யாவிடம் வந்த சல்மான் கான் காதலிக்கிறியா இல்லையா என்று கேட்க ஐஸ்வர்யா ராய் இல்லவே இல்லை என்று கூறி பிரேக் அப் செய்துவிட்டார். இதனால் சல்மான் கான் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement