• Dec 25 2024

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஷங்கர் மகள் திருமணம்! நேரில் வாழ்த்திய கமல், ரஜினி, நயன், ஸ்டாலின், விக்ரம்..! போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக காணப்படும் இயக்குநர் சங்கர் ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து இந்தியன், ஜீன்ஸ், காதலன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி, அந்நியன், நண்பன், எந்திரன், ஐ,  2.0 என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2, தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில்,  இயக்குந்ர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் பிரம்மாண்டமாக இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


இயக்குநர் சங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரின் இளைய மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அதர்வாவின் தம்பி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

மூத்த மகளான ஐஸ்வர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹித் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அதன்பின்பு அவரது இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.


உதவி இயக்குனராக காணப்பட்ட தருண் கார்த்திகேயனை தனது மருமகன் ஆக ஏற்று அவர்களுடைய திருமணத்தை இன்றைய தினம் பிரம்மாண்டமாக நடத்தி வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இந்த திருமணத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து பிரபலங்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வைத்துள்ளார்.


இவ்வாறான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் சங்கர் மகளின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு நட்சத்திரங்களும் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement