• Dec 26 2024

அரை டவுசருடன் வில்லன்களை முறித்து எடுக்கும் சண்முக பாண்டியன்! வெளியானது 'படைத் தலைவன்' டீசர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜயகாந்த் அண்மையில் உயிரிழந்த சம்பவம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மகனான சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதை தொடர்ந்து Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் ஜானரில் உருவாகும் 'படைத்தலைவன்' திரைப்படத்தில் சண்முகபாண்டியன் நடித்து வந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சண்முக பாண்டியனுக்கு பரிசு கொடுக்கும் வகையில், 'படை தலைவன்' படத்தின் டீசரை வெளியிட்டு தமது பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தனது தந்தை விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் இன்றைய தினம் தனது 31வது பிறந்தநாள் மிக எளிமையாக சண்முக பாண்டியன் கொண்டாடியுள்ளார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பர்த்டே பிளாஸ்டர் என இன்னொரு டீசரும் வெளியாக இருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவாகும் நிலையில், இந்த படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியான டீசரின் அடிப்படையில் இந்த காட்சிகள் ஆக்சன் நிறைந்த காட்சிகளாகவும், அதில் அரை டவுசர் அணிந்த படியே சண்டை போட்டு வில்லன்களை தெறிக்க விடுகிறார் சண்முக பாண்டியன்.  


Advertisement

Advertisement