• Dec 26 2024

மீண்டும் என்ட்ரி ஆகிறாரா ஜீவா? அண்ணாமலை வீட்டில் ஏற்படுகிறதா பூகம்பம்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறக்கடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் ஜீவா கேரக்டர் சீரியலில் வந்தது என்பது அவரிடம் இருந்து மனோஜ் மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் மிரட்டி 30 லட்சம் ரூபாய் திரும்பி வாங்கிக் கொண்டார்கள் என்பதையும் பார்த்தோம். அந்த பணத்தை தான் ரோகிணி தனது அப்பா கொடுத்த பணம் என்று பொய் சொல்லி தற்போது ஷோரூமையும் வாங்கி வைத்து உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவியில் நடிக்கும் நட்சத்திரங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் மீனா தங்கச்சி சீதா என்ற கேரக்டரில் நடிக்கும் சங்கீதா லியோனிஸ் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ’சிறகடிக்க ஆசை’ குழுவினர் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது சங்கீதாவும் இதுகுறித்த இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவற்றில் ஒன்றில் ஜீவா மற்றும் சீதா நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சீரியல் குழுவினர் மொத்தமாக இருக்கும் காட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் மீண்டும் ஜீவா கேரக்டர் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் திரும்ப வருகை தர இருப்பதாகவும் அவர் அண்ணாமலை வீட்டுக்கே சென்று ’என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் மகனிடம் இருந்து பணத்தை ஏமாற்றியது நான் தான், ஆனால் அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாயை நான் வட்டியுடன் சேர்த்து மனோஜ் -ரோகிணி இடம் கொடுத்து விட்டேன்’ என்று கூறும் காட்சிகள் இருப்பதாகவும் இதனை அடுத்து அண்ணாமலை வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement