• Dec 27 2024

பேருந்தில் கண்ட இடத்தில் கை வைத்த நபர்.. பளார் என அறைந்த விஜய் டிவி சீரியல் நடிகை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பேருந்தில் பயணம் செய்யும்போது கண்ட இடத்தில் கை வைத்த நபரை விஜய் டிவி சீரியல் நடிகை கன்னத்தில் பளார் என அறைந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’சக்திவேல்’ என்பதும் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிகை அஞ்சலி பாஸ்கர், பேராசிரியை சக்தி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவரை பணக்கார வீட்டு பையன் வேல் காதலிப்பது போன்ற காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அஞ்சலி பாஸ்கர் பேட்டி ஒன்றில் ’ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் நல்ல உடை கூட இல்லாமல் தோழிகளின் உடையை அணிந்து தான் படப்பிடிப்பு சென்றுள்ளேன் என்றும் ஆட்டோவுக்கு கூட காசு இல்லாமல் பேருந்தில் தான் படப்பிடிப்புக்கு செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை தான் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு நபர் கண்ட இடத்தில் கை வைத்த போது கடுப்பான நான் அந்த நபரை ஓங்கி அறைந்து விட்டேன் என்றும் அசிங்கமாக திட்டிவிட்டேன் என்றும் தெரிவித்தார். பொதுவாக பேருந்தில் ஒரு பெண்ணுக்கு அவமதிப்பு ஏற்படும்போது யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றும் எனக்கும் அது போல் தான் நடந்தது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் குறித்து அவர் கூறிய போது என்னை பொருத்தவரை யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைக்கவில்லை என்றும் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நான் இந்த துறைக்கு வந்துள்ளேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் பலருக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்ததாக நான் கேள்விப்பட்டிகிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement