• Dec 28 2024

கம்ப்யூட்டர் வாங்கிய ’சிறகடிக்க ஆசை’மீனா.. மனோஜ்க்கு துரோகம் செய்கிறாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ மீனா, மனோஜ் ஷோரூமில் வாங்காமல் வேறொரு கடையில் கம்ப்யூட்டர் வாங்கியதை அடுத்து மனோஜ்க்கு அவர் துரோகம் செய்து விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பாக சமீபத்தில் மனோஜ் புதிய கடையை திறந்ததும் அவர் காட்டும் பந்தா தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நாயகி ஆக மீனா என்ற கேரக்டரில் நடைபெறும் கோமதி பிரியா அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் தற்போது அவர் ஒரு ஹோம் அப்ளையன்ஸ் கடைக்கு விளம்பரத்தில் நடித்தபோது கம்ப்யூட்டர் மற்றும் டிவி ஆகிய இரண்டும் சேர்த்து ஒரே பொருளாக வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இது குறித்த வீடியோவை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் கமெண்ட் பகுதியில் ’மனோஜ் கடையில் வாங்காமல் எதற்காக இன்னொரு கடையில் வாங்குகிறீர்கள்? மனோஜ்க்கு நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள்? போன்ற கமெண்ட்களை காமெடியாக பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ’நீங்கள் பூக்கடை தானே வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எதுக்கு சிஸ்டம்? என்று சிலரும், ஒரு பக்கம் சீரியலில் வருமானம் இன்னொரு பக்கம் விளம்பரத்தில் வருமானம் அடிச்சு கொளுத்துங்க, என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

Advertisement

Advertisement