• Dec 26 2024

நடனப் பள்ளியில் பிரச்சனை.. மீனாவை குறை சொல்லும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் விஜயா நடன பள்ளி ஆரம்பிக்க ரோகிணி ஐடியா கொடுத்ததும் இதனை அடுத்து விஜயாவின் தோழி பார்வதி வீட்டில் நடன பள்ளி ஆரம்பிக்க திட்டமிடும் காட்சி உடன் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த வார எபிசோடுகளின் முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் நடன பள்ளி ஆரம்பித்த விஜயாவுக்கு பார்வதி வாழ்த்து தெரிவித்த நிலையில் விஜயா சோகத்துடன் உட்கார்ந்து இருக்கிறார்.

அப்போது அண்ணாமலை வந்து ’என்னாச்சு’ என்று கேட்க ’டான்ஸ் கத்துகிறதுக்கு ஒரு ஈ எறும்பு கூட வரலை’ என்று சொல்ல உடனே முத்து ’அதுதான் இந்த கோபமா’ என்று கூறி ’அம்மாவின் சோகத்தை போக்க நாம் ஒரு விஷயம் செய்ய வேண்டும்’ என்று சொல்ல ’எப்படி’ என்கிறார் மீனா.

இதனை அடுத்து பூ, பழம் வெத்தலை பாக்கு உடன் டான்ஸ் கற்றுக்கொள்ள முத்து மீனா ஆகிய இருவரும் வந்து அம்மாவின் நடனப் பள்ளியில் சேர வந்திருக்கிறோம் என்று கூறுகிறார். அப்போது விஜயா ’முடியாது’ என்று கூற, ’எங்களுக்கு ஆட வருகிறதா என்பதை செக் பண்ணி பாருங்கள்’ என்று மீனா கூறி ஆடியும் காண்பிக்கிறார்.

அப்போது ’நிறுத்துங்கள்’ என்று கூறும் விஜயா ’இதுக்கு பெயர்தான் ஆட்டமா’ என்று கேட்க ’நீங்கள் சொல்லிக் கொடுங்கள் நாங்கள் ஆடுகிறோம்’ என்று சொல்ல பார்வதியும் ’அது சரிதானே’ என்று கூறுகிறார்.

அப்போது விஜயா மீனாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த போது திடீரென விஜயாவுக்கு கழுத்து பிடித்து விடுகிறது. இதனை அடுத்து ’நீதான் ஏதோ பண்ணினாய்’ என்று விஜயா அதற்கும் மீனாவின் மேல் குற்றம் சொல்வது உடன் இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் முத்து, மீனா ஆகிய இருவரும் விஜயாவுக்கு நல்லது செய்தாலும் அது பிரச்சினையாகி தான் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement