• Dec 26 2024

மீனாவை கடத்தியது கந்துவட்டி சுதாகரா? நேரில் சென்று பார்த்த முத்துவுக்கு பயங்கர அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் காணாமல் போன மீனாவை பற்றி கவலை கொள்ளாமல் ரோகிணி  சமைத்த சாப்பாட்டை விஜயா, மனோஜ், ரவி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சாப்பாட்டை அனைவரும் கிண்டல் செய்கின்றனர்.

அப்போது அண்ணாமலையை சாப்பிட விஜயா அழைத்தபோது தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறி முத்துவிடம் ’நீ ஏதாவது மீனாவை சொன்னாயா’ என்று கேட்டார். அதற்கு முத்து தனது நண்பர் திருமண பத்திரிகை கொடுக்க வரும்போது நடந்ததை சொன்னபோது அண்ணாமலை முத்துவை திட்டுகிறார். நமக்கு வேண்டாதவர்கள் ஏதாவது சொன்னால் மனம் காயப்படாது, ஆனால் நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் சின்ன வார்த்தை சொன்னால் கூட ஆழ்மனதை காயப்படுத்தும் என்று சொல்லுகிறார்.

இந்த நிலையில் மீனாவின் தங்கை சீதா முத்துவுக்கு போன் செய்து கந்துவட்டி சுதாகர் இதுவரை ஊரில் இல்லை, ஆனால் இப்போது வந்திருக்கிறான், ஒருவேளை அவன் தான் மீனாஅக்காவை ஏதாவது செய்திருப்பான் என்று சந்தேகம் வருகிறது என்று சொல்ல, உடனே முத்து செல்வத்தை அழைத்துக் கொண்டு கந்துவட்டி சுதாகர் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு சுதாகரின் அடியாட்கள் முத்துவை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, அங்கு ஒரு பெரிய சண்டை நடக்கிறது, அதன் பிறகு முத்து உள்ளே சென்று பார்த்தபோது கந்துவட்டி சுதாகர் விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாகி இருப்பது தருகிறது. இதனை அடுத்து மீனா எங்கே சென்று இருப்பார் என்று முத்து பதட்டமாகிறார்.



இந்த நிலையில் தான் விஜயாவிடம் மனோஜ் ’மீனா ஒருவேளை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என் சாவுக்கு காரணம் எனது மாமியார் கொடுமை தான் என்று லெட்டர் எழுதி வைத்திருக்கலாம்’ என்று சொல்ல, விஜயா மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் சிட்டி சத்யாவிடம் ’உன் அக்காவை காணவில்லை என்று போலீசில் புகார் கொடு, முத்து தான் ஏதாவது பண்ணி இருப்பான் என்று ஏத்தி விட சத்யாவும் போலீஸில் சென்று புகார் அளிக்கிறார். அப்போது அண்ணாமலையும் முத்துவிடம் போலீஸில் சென்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விடு என்று கூற அவரும் கம்ப்ளைன்ட் கொடுக்க முத்து போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். அப்போது சத்யா, முத்து ஆகிய இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement