• Dec 26 2024

முதன் முறையாக மீனாவுக்கு வந்த ஆசை? படாதபாடுபட்ட முத்து.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , மீனா அவருடைய அம்மாவை பார்க்க சென்றபோது சத்யா காலேஜுக்கு கிளம்புகின்றார். இதனால் அவருக்கு கையில் காசு கொடுத்து அனுப்புகின்றார் மீனா. மேலும் தற்போது அவனை பார்க்க சந்தோஷமாக இருப்பதாக மீனாவின் அம்மா சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் அங்கு கோயில் பூசாரி, பெண் ஒருவரை கூட்டி வந்து இந்த முறை கொலு பொம்மை வைப்பதற்கு உதவி செய்ய முடியுமா என மீனாவிடம் கேட்கின்றார். அதற்கு மீனா அவரது அம்மாவை பார்க்க, தான் செய்து தருவதாக சொல்லுகின்றார். மேலும் குறித்த பெண் மீனாவிடம் நீங்கள் உங்கள் வீட்டில் கொலு  வைக்க இல்லையா? எனக் கேட்டதோடு என்னிடம் உள்ள பொம்மைகளை தாரேன் கொலு வைப்பது வீட்டிற்கு நல்லது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா, தனக்கு கொலு வைக்க ஆசையாக இருப்பதாக முத்துவிடம் சொல்லுகின்றார். இதனால் மீனா முதன்முதலாக ஆசைப்பட்டு கேட்ட விடயம் என்று இதனை அண்ணாமலையிடம் சொல்லுகின்றார். அண்ணாமலை விஜயாவிடம் கேட்கின்றார்.

முதலில் வேண்டாம் என மறுக்கின்றார் விஜயா. ஆனால் உனது குரல் சுசிலா போல உள்ளது. நீதான் பாட வேண்டும் என்று எக்கச்சக்கமாக ஐஸ் வைத்து ஒத்துக்க வைக்கின்றார் அண்ணாமலை. இதனால் மீனாவும் முத்துவும் சந்தோஷப்படுகிறார்கள்.


இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியை சந்தித்து ரவி அந்தப் பெண்ணுடன் கடைக்குப் போன விஷயத்தை சொல்லி, அவரை கண்காணிப்பில் வைக்குமாறு சொல்லுகின்றார். ஆனால் என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இனி இப்படி பேசிகிட்டு வராதே என ஸ்ருதி சொல்லுகின்றார்.

இறுதியாக பார்வதி வீட்டில் விஜயா கொலு பொம்மை வைக்கின்ற விஷயத்தையும் அதனை மீனா சொன்ன விஷயத்தையும் பற்றி சொல்ல, எப்படி இருந்தாலும் அது விஜயா வீட்டில் வைத்த கொலு என்று தானே சொல்லுவார்கள் என பார்வதி சொல்ல, விஜயா சந்தோஷப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement