• Dec 27 2024

உடம்பெல்லாம் தங்கம்.. மனோஜ்க்கு 15 லட்சம் கிடைத்தவுடன் இப்படியா? வேற லெவல் மேக்கப்பில் விஜயா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வரும் அனிலா ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடம்பெல்லாம் தங்கம் அணிந்து நாட்டிய கலைஞர் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட் பதிவாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறக்கடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் 27 லட்சத்தை ஜீவாவிடம் இழந்த மனோஜ், தற்போது வட்டியும் முதலுமாக சேர்ந்து 30 லட்சத்தை திரும்பி வாங்கி விட்டார் என்பதும் அதன் பிறகும் ரோகிணி தனது குறுக்கு புத்தியை காண்பித்து வருகிறார் என்பதையும் இன்றைய எபிசோடில் பார்த்தோம்.

ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் வாங்கினாலும் 15 லட்சம் மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் அதுவும் ரோகிணி அப்பா அனுப்பி வைத்தது என்று மனோஜ் உளர, விஜயா இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் என்பதும் இந்த பணம் குறித்து முத்துவும் தனது சந்தேகத்தை கேட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் விஜயா கேரக்டரில் நடிக்கும் அனிலா ஸ்ரீகுமார் உண்மையில் ஒரு நாட்டிய கலைஞர் என்பதும் அவர் பல மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சர்வதேச நாட்டிய தினத்தை முன்னிட்டு அவர் தனது குழுவினர்களுடன் நாட்டிய கலைஞர் வேடமணிந்து அசத்தலாக நாட்டியமாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனோஜ்க்கு 15 லட்சம் கிடைத்தவுடன் அந்த பணத்தை வைத்து நீங்கள் நகையாக செய்து போட்டு கொண்டீர்களா என்பது போன்ற காமெடியான கமெண்ட் பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement