• Dec 27 2024

மீனா தங்கச்சி சீதா கதறி கதறி அழுவுறாங்களே.. ஏதாவது விபரீதம் நடந்துருச்சா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா கேரக்டரின் தங்கை சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறக்கடிக்க ஆசை’ சீரியலில் நடித்து வரும் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட இயக்குனர் முக்கியத்துவம் தந்து வருகிறார் என்பதும் அதனால்தான் இந்த சீரியல் ஆரம்பித்த ஒரே வருடத்தில் பார்வையாளர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனாவின் தங்கை சீதா என்ற கேரக்டரில் நடிக்கும் சங்கீதா அவ்வப்போது தான் சீரியலில் வந்தாலும் அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்பதும் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கமிட் ஆன பிறகுதான் சங்கீதாவுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் குவிந்தார்கள் என்பதும் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரும் ’காதலா காதலா’ என்ற பாடலுக்கு சங்கீதா, அஸ்வின் கண்ணனுடன் இணைந்து நடித்துள்ள காட்சிகள் உருக வைக்கும் அளவுக்கு உள்ளன.

’கில்லி’ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா பேருந்தில் செல்லும் காட்சிகள் இருக்க, சங்கீதாவின் ரீல்ஸ் வீடியோவில் அஸ்வின் கண்ணனுடன் அவர் டூவீலரில் செல்லும் காட்சிகள் உள்ளன. அச்சு அசலாக த்ரிஷா போலவே அவர் நடித்துள்ளதை அடுத்து அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Advertisement

Advertisement