• Dec 26 2024

நடிகர் விக்ரம் கேரியரில் இத்தனை தோல்வி படங்களா? லிஸ்ட் ரொம்ப நீளுதே..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளதோடு சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் தான் எந்த எல்லைக்கு என்றாலும் சென்று நடிப்பார்கள். அந்த வகையில் நடிகர் சியாம் தன்னை வருத்தி மக்களுக்கு படங்களை கொடுப்பதில் முதலிடத்தில் காணப்படுகின்றார்.

இந்த நிலையில், சியான் விக்ரம் நடித்த படங்களில் தோல்வி படங்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளன. அவை பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி 2022 ஆம் ஆண்டு வெளியான கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.

சாமி முதலாவது பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஹரி எடுத்திருந்தார். ஆனாலும் இந்த படமும் படு தோல்வி அடைந்தது.


அதேபோல 2018 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் ஸ்டைலிஷ் நாயகனாக ஆக நடித்த ஸ்கெட்ச் திரைப்படமும் தோல்வியடைந்தது .  அதேபோல விக்ரமை விட சமந்தா அதிகம் ஸ்கோர் செய்த படம் தான் 10 என்றதுக்குள்ள.. இந்த படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான போதும் தோல்வி அடைந்தது.

லலித் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் 2002இல் வெளியாகி தோல்வியை கண்டது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் பெண் வேடம் போட்டு நடித்த திரைப்படம் தான் இருமுகன். இந்தப் படமும் சரிவை சந்தித்தது. சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை படமும் படு தோல்வியை சந்தித்த படமாகும்.

இயக்குனர் பியோய் நம்பியார் இயக்கத்தில் வெளியான டேவிட் திரைப்படமும் வெற்றி பெறவில்லை. சுசி கணேசன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கந்தசாமி திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.


Advertisement

Advertisement