• Dec 26 2024

"ஸ்டான்ட் வித் வயநாடு" வைரலாகும் நடிகர் சூரியின் முகநூல் பதிவு !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெய்துவரும் கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்கதியாய் உதவியை எதிர்பார்த்து நிற்கும் இத் தருணத்தில் பல்வேறு தரப்பினரும் தம்மாலான உதவிகளை புரிந்து வருகின்றனர்.

நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள்!

பிரபலங்கள் மற்றும் பெருமுதலாளிகள் கேரளா முதல்வர் நிவாரண நிதி மூலம் நிவாரணத்திற்கான நிதியை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூரி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


வயநாடு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்க்கும் ஆண்டவனின் துணையை வேண்டி நிற்கும் சூரி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த பதிவில் "வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும்," என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement