தமிழ் திரையுலகில் வசூல் சாதனைகளை முறியடிக்கும் வகையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' திரைப்படம் உலகளவில் வெளியான பத்து நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை தாண்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனை பிரதீப் ரங்கநாதனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'டிராகன்' படம், அதன் கதைக்களம், ஆக்சன் காட்சிகள், மெய்சிலிர்க்கும் திரைக்கதை மற்றும் முக்கியமாக பிரதீப்பின் நடிப்பால் வெற்றியை பெற்றுள்ளது.
இப்படம் பிரதீப் ரங்கநாதனின் மிகவும் மாஸ் அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக இருக்கிறது. அவருடைய முந்தைய படமான 'லவ் டுடே' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, 'டிராகன்' படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. அந்தவகையில் இப்பொழுது இத்தகைய வசூலை பெற்றுக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!