• Dec 25 2024

சூர்யாவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. அதிரடியாக வெளியான அறிவிப்பு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய காரணத்தினால் படுமோசமாக விமர்சிக்கப்பட்டு வசூலிலும் சரிவை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோயம்பத்தூரில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சூர்யாவின் 45 வது படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

d_i_a

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யாவின் 45வது படத்தில் இசை அமைப்பாளராக காணப்பட்ட ஏ.ஆர் ரகுமான் திடீரென விலகி இருந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஆனாலும் அதற்கு பின்பு அவர் ஒப்பந்தம் செய்யும் போதே தனக்கு நிறைய படங்கள் இருப்பதினால் இந்த படத்தில் பணி புரிய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைத்துள்ளனர்.


இதற்கு இடையில் தனது  விவாகரத்தை அறிவித்தார் ஏ.ஆர் ரகுமான். இதனால் தான் இந்த படத்தில் இருந்து விலங்குகின்றேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளதாம். ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை மட்டும் முடித்துக் கொடுக்க ஏ. ஆர் ரகுமான் முடிவடைந்துள்ளதாக செய்திகள் பரவி இருந்தன.

இவ்வாறான நிலையில், சூர்யாவின் 45 வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக களமிறங்க உள்ளார். ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அதிரடி காட்டி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement