• Dec 25 2024

தவெக தலைவராக துள்ளிக் குதித்த தளபதி விஜய்..! யார் யார் என்ன சொன்னாங்க தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே விஜய் தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ் ஒன்றை அறிவித்தார். அதாவது தன்னுடைய தமிழக வெற்றி  கழகம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்பு சமீபத்தில் கட்சியின் கொடி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இன்றைய தினம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தனக்கே உரித்தான வெள்ளை நிற சட்டை அணிந்து மேடையில் துள்ளிக் குறித்து விஜய் ஓடி வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்ட ரேங்க் வாக் சாலையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கை அசைத்து உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய். மேலும் கட்சி கொடியின் நிறத்தில் தொண்டர்கள் அணிந்த துண்டுகளை அவர் மீது வீச அதையும் ஒவ்வொன்றாக எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டு வீரநடை போட்டுள்ளார்.

இளைய தளபதி விஜய் இன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ள நிலையில், பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதேபோல அவரது அம்மாவும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.


அதன்படி விஜய் ஒரு நல்ல பிள்ளை நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என பிரபு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதேபோல முதல் மாநில மாநாடு சிறக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என விஜய் சேதுபதியும், முதல் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் இது மிகப்பெரிய நாள் என சாந்தனுவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பயணத்தை தொடங்கும் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளதோடு, விஜய் ஆரம்பித்து இருப்பது கட்சி அல்ல இயக்கம், அவரது மாநாட்டில் லட்சக்கணக்காக  கூடியிருப்பது ரசிகர்கள் அல்ல தொண்டர்கள், அமையட்டும் நல்லாட்சி எப்போதும் விஜய்க்கு பெற்றோரின் ஆசை உண்டு என்று விஜயின் தாயார் சோபா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement