• Dec 25 2024

"ஆல் ஏரியா ஐயா கில்லி" அனிருத்துக்கு செட் ஆகும் தளபதியின் வசனம் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசை என்ற ஒன்றிற்கே அடுத்தடுத்து போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் சினிமாவுக்கே வைரல் என்ற வார்த்தையை அறிமுகம் செய்த சிறுவன் தான் "அனிருத்".'வை திஸ் கொலவெறி' பாடல் மூலம் இந்தியா தாண்டிய உலக அளவில் பிரபலமானார் "3" படத்தின் அறிமுக இசையமைப்பாளர் அனிருத்.

3 - Why This Kolaveri Di Making Video | Dhanush, Shruti | Anirudh - YouTube

படத்தில் வரும் ஒற்றிரண்டு பாடல்களை ஹிட் பாடலாக மாற்ற மற்றைய இசையமைப்பாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது படத்தின் மொத்த பாடல்களையும் ஹிட் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார் அனிருத். தற்போது  வெளிவரும் அனைத்து படங்களிலும் டைட்டில் கார்டில் "இசை அனிருத்" என வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.


இப்படியிருக்க அனிருத்தின் பாடல்கள் யாவும் யூடியூப்பில் ரெகார்ட் செய்து வருவது வழக்கமாகியுள்ளது.யூடியூப் வலைத்தளத்தில் வேகமாக 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது அனிருத்தின் பாடல்கள்.கோலிவுட்டை  தாண்டி பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் ரெகார்ட் வைத்துள்ளார் அனிருத்.


வேகமாக 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல்கள் வரிசையில் தமிழில் "அரபிக்குத்து",இந்தியில் "ஜிந்தா பண்டா" ,மற்றும் தெலுங்கில் "சுட்தமல்லே" பாடல்கள் அனிருத்தின் இசையில் வெளிவந்துடன் வெளியிடப்பட்டு குறைந்த நேரத்தில் 50 மில்லயன் பார்வையாளர்களை தாண்டிய பாடல்களாக அறியப்படுகின்றன.

Advertisement

Advertisement