• Dec 27 2024

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டப்பிங்கை தவிர்த்த நடிகர்.. காரணம் என்ன தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்று கெத்து காட்டியது.

தற்போது இந்த சீரியலில் மீனாவும் முத்துவும் க்ரிஷை தத்தெடுப்பதற்காக ரோகிணியின் அம்மாவிடம் கதைக்கின்றார். ரோகினியின் அம்மாவுக்கும் அதுதான் சரி என்று படுகின்றது. ஆனாலும் உனக்கு என் பிள்ளை தொந்தரவா போய்ட்டானா? என் பிள்ளையை எனக்கு பார்க்க தெரியும் என தனது அம்மாவுக்கு பேசிவிட்டு போனை வைக்கிறார் ரோகிணி.

இந்த சீரியலில் ரோகினியின் கடந்த கால வாழ்க்கை எப்போது விஜயா வீட்டுக்கு தெரிய வரும் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அவர் இதுவரை செய்த எந்த தப்பும் வெளி வராமல் இருப்பது ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது.

சத்யா விஷயத்திலும் அவர் செய்த சம்பவங்கள் வெளி வராமல், முத்துவும் வெளியே சொல்லாமல் மூடி மறைப்பது கதையின் சுவாரசியத்தை குறைப்பதாகவே காணப்படுகின்றது. ஆனாலும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த சீரியலில் முத்துவின் நண்பராக செல்வம் கேரக்டரில் நடிப்பவர் தான் பழனியப்பன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பழனியப்பன், அதில் 'தனக்கு சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டப்பிங் பேசுவதற்கு வர சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய நண்பர் கோட் படத்திற்கு டிக்கெட் தந்தார். நான் டப்பிங் செல்லாமல் கோட் படம் பார்க்க வந்துவிட்டேன் என்று சொல்லி உள்ளார்'

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோட் படம் பற்றியும் உங்களை டைரக்டரிடம் மாட்டி விடுவோம் எனவும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 



Advertisement

Advertisement