• Dec 28 2024

விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. இனி அவருக்கு பதில் யாரு தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று இல்லத்தரசிகள் முதல் இளம் வட்டார ரசிகர்கள் வரையில்  காணப்படுகின்றார்கள். அதிலும் சன் டிவி, விஜய் டிவி சீரியல் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு சீரியல் மீது அளப்பெரிய மோகம் கொண்டுள்ளார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை சீரியல், மகாநதி, நீ நான் காதல், பாண்டியன் ஸ்டோர் 2 உட்பட பல சீரியல்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியல்களாக காணப்படுகின்றன. இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்கும் தவறவில்லை.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் நீ நான் காதல். இந்த சீரியல் 2023 ஆம் ஆண்டு நிறைய புது முகங்களோடு ஆரம்பிக்கப்பட்டது.


தற்போது வரை 200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதோடு காதல் கதையை மையப்படுத்தி வரும் இந்த தொடர் ஹிந்தி தொடரின் ரீமேக்காக உள்ளது.

ராகவ் - அபிநயா, ஆகாஷ் - அணு ஆகியோரின் வாழ்க்கையை  மையமாகக் கொண்டுதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அணு என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சாய் காயத்ரி.

இந்த நிலையில், நீ நான் காதல் சீரியல் இருந்து அவர் திடீரென விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நடிகை அக்ஷிதா இனி அணு  கேரக்டரில் நடிக்க உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement