• Dec 25 2024

கூடவே இருந்து 3 லட்சத்தை சுருட்டிய இயக்குநர் தலைமறைவு! 4 பிரிவுகளில் கேஸ் போட்டு வலைவிரித்த போலீஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் தேசிங்கு பெரியசாமி.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்தில்  ரஜினிகாந்த் வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் அந்த படம் ட்ராப் ஆனதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிலம்பரசனின் 48வது படத்தில் கமிட்டானார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.


இந்த நிலையில், சிலம்பரசன் பட இயக்குநரிடம் மூன்று லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டதாக உதவி இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதாவது, தேசிங்கு பெரியசாமியின் உதவி இயக்குநரான முகமது இக்பால் அவரிடம் 3 லட்சம் மோசடி செய்துள்ளாராம். இதை தொடர்ந்து அவர் மீது  4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, சிம்பு நடிக்கும் 48வது படம் தொடர்பான அப்டேட்கள் எதுவும் வெளிவராத நிலையில், அந்த படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement