• Dec 25 2024

தயாராகும் இந்தியாவின் மாபெரும் காவியத்திரைப்படம்! இணையும் இரண்டு ஆஸ்கார் ஜாம்பவான்கள்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

கமர்சியல் திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்த இந்திய திரையுலகம் பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிஸ்டோரிகள் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகின்றது. அவ்வாறே மிக பெரிய பொருட்செலவில் ராமாயண கதையை திரைப்படமாக எடுத்த பிரபாஸின் ஆதிபுருஷ் படு தோல்வி அடைந்திருந்தது. 


தொடர்ந்து கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தமிழில் மணிரத்ணம் இயக்கத்தில்  தயாரான வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன் ஆகும். இதன் இரண்டு பாகங்களின் அமோக வெற்றியே சூர்யாவின் கங்குவா திரைப்படம் உருவாகுவதற்கும் காரணம் எனலாம். இந்த நிலையிலேயே ஹிந்தியில் தயாராகும் ராமாயணம் திரைப்படத்தில் AR ரகுமான் இணைந்துள்ளார்.


நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பிகபுர் , சாய்பல்லவி , யாஷ் மற்றும் சன்னி தியோல் இணைந்து நடிக்கும் திரைப்படம் ராமாயணம் ஆகும். முன்னணி நடிகர்களின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் குறித்த திரைப்படத்தில் AR ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் இணைகிறார்கள் என்று தகவல் வெளியாகின்றது. குறித்த திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வரும் என படக்குழு அறிவித்ததோடு , AR ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.       

Advertisement

Advertisement