• Dec 25 2024

திருட்டுத்தனமாக மாமனாரை பார்த்த மீனா - ரவியை அடித்து துரத்திய குடும்பத்தினர்.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், ரவி அப்பாவை பார்க்க பதறியடித்து ஓடி வருகிறார்.எனினும் எல்லோரும் அவரைப் பிடித்து திட்டுகின்றனர். ஆனாலும், ரவி அப்பாவை பார்க்காமல் போக மாட்டேன் என்று முயற்சி செய்கிறார்.  அந்த சமயத்தில், 'உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை நீ அப்பாவ பார்க்கக் கூடாது என முத்து ரவியை திட்டி அடித்து துரத்துகிறார். விஜயாவும் அவரை திட்ட  ரவி வேறு வழி இல்லாமல் அங்கிருந்து செல்கிறார். இதையடுத்து அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது.

அந்த நேரத்தில்,மனோஜ் மருந்து மாத்திரை வாங்க வெளியே செல்ல, யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே செல்கிறார் மீனா. அங்கு அண்ணாமலையில் நண்பர் மட்டும் இருக்க, மீனா அங்கு வந்து 'மாமாவை பார்க்கணும்' என்று சொல்லி அவரது கையில் சாமி கயிறை கட்டுகிறார்.


அதற்குள் விஜயாவும் ரோகிணியும் வந்துவிட அண்ணாமலையின் நண்பர் மீனாவுக்கு போன் செய்து 'நீ அந்த வழியாக போயிடு' என கூறுகிறார். அதன்படி  மீனா வேறு வழியாக வெளியேற ரோகிணியும் விஜயாவும் மற்றோரு வழியாக உள்ளே சென்று அண்ணாமலையை பார்த்து கலங்குகின்றனர்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த ரவி 'என்ன அப்பாவை பார்க்க கூட விடல' என கலங்கி அழ ஸ்ருதி ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement