• Dec 26 2024

ரோஜாவை எதிர்த்து போட்டியிட தேர்தலில் குதித்த பிரபல நடிகை! ஆந்திர அரசியலில் திடீர் கலவரம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஆந்திராவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக அனுஷ்காவும் காணப்படுகிறார். பாகுபாலி படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்தும் அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

இந்த நிலையில், நடிகை அனுஷ்கா தற்போது ஆந்திரா அரசியலுக்கு வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.



இது தொடர்பில் ஜனசேனா கட்சித் தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும், தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவரும் சினிமா திரையுலகில் இருந்து விரைவில் விடை பெற்று, முழு நேர அரசியல் வாதியாகவே மாறுவார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன.



அதே வேளை, ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் ரோஜாவும் மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் போட்டியிட மீண்டும் களம் இறங்கியுள்ளார். அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த தொகுதியில் தமிழர் தான் கணிசமாக உள்ளார்களாம்.

இவ்வாறான நிலையிலே நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்களாம். இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதே வேளை தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் இதுவரையில் அனுஷ்கா வெளியிடவில்லை என்பதும், ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடுவதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement