• Dec 27 2024

புதிய லீடராக தெறிக்கவிட்ட தளபதி... அரசியல் வாடை தான் ஹெவியா வீசுது!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றைய தினம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒன்று காணப்பட்டது. அதாவது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திலிருந்து அதன் ட்ரைலர் இன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த படத்தின் டிரைலர் என்ன ஆகும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து கோட் படத்தின் டிரைலர் இன்றைய தினம் 5 மணிக்கு வெளியானது. ஆனால் இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மங்காத்தாவை விட 100 மடங்கு தரமான படத்தை கொடுப்பதற்காக வெங்கட் பிரபு உழைத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த படத்தில் காந்தி என்னும் கேரக்டரில் அப்பா விஜய் நடித்துள்ளார். ஏற்கனவே மகான் படத்தில் சீயான் விக்ரம் காந்தி என்ற கேரக்டரில் நடித்தது போலவே அவர் சரக்கு அடித்த காட்சிகளை போலவே இந்த படத்திலும் இருப்பது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது சந்தேகம் தான்.


ஆனாலும் அதில் வயசு ஆகிடுச்சு இனிமேல் என்ன பண்ண முடியும் என்று நினைக்கின்றீர்களா என்ற விஜயின் வசனமும் அதற்கு  மகேந்திரன் லயன் இஸ் ஆல்வேஸ் லயன் என சொல்லும் வசனமும் வேற லெவலில் காணப்படுகின்றது.

இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே பிரசாந்த் உங்களை லீட் பண்ண போறது ஒரு புது லீடர் என்ற வசனத்தில் விஜயின் அரசியல் வாடை ஹெவியாகவே வீசுகின்றது.

மேலும் இந்த படத்தில் தீவிரவாதியாகவும் மெயின் வில்லனாகவும் மோகனை காட்டுகின்றார்கள். அத்துடன் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜயின் டீமாக காட்டப்பட்டுள்ளனர். மேலும் சினேகா தனது கணவருக்கு பெண்களோடு சகவாசம் இருக்கின்றதோ என்ற சந்தேகத்தையும் இதில் கிளப்பியுள்ளார்.

அத்துடன் இந்த படத்தில் இளம் வயது விஜயை ஏஜிங் டெக்னாலஜி மூலம் காட்டி இருக்கின்றார்கள். எனவே இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement