• Dec 26 2024

பாக்கியா வீட்டில் நடந்த நல்ல விஷயம்.. அமிர்தாவை தேள் போல் கொட்டும் ஈஸ்வரி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனி எல்லாரிடமும் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லுகின்றார். ஆனாலும் இன்னும் செக் பண்ணி பார்க்கவில்லை என்று சொல்ல, அந்த நேரத்தில் செழியன் பிரக்னன்சி செக் பண்றதுக்கு ஸ்டிக் வாங்கி வருகின்றார். அதன் பின்பு கன்ஃபார்ம் பண்ணுகின்றார் ஜெனி.

இதனால் எல்லாரும் சந்தோஷப்பட பாக்கியா அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கின்றார். கோயிலுக்கு சென்ற ராமமூர்த்தியும் ஓடிவந்து ஜெனி, செழியனுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றார். அதன் பின்பு எழிலும் வீட்டிற்கு வந்து நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை தானே போட்டு இருப்பீங்க இதுல எப்படி பாப்பா வந்துச்சு என செலியனை கிண்டல் அடிக்கின்றார்.

அதன் பின்பு ஈஸ்வரி ஜெனி அம்மாவுக்கு போன் பண்ணி சொல்ல, அவர்களும் வந்து ஜெனியை பார்த்துவிட்டு செல்கின்றார்கள். 


இதை தொடர்ந்து ராமமூர்த்தி வீட்டில் தொடர்ந்து கெட்ட செய்தியாக வந்துட்டே இருந்துச்சு இப்பதான் நல்ல விஷயம் நடக்குது என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு அமிர்தா வந்ததும் ஜெனி புத்திசாலி இரண்டாவது பிள்ளையும் பெறப்போகிறார் என்று அமிர்தாவை குத்தி காட்டி பேச, பாக்கியா அமிர்தாவை துணி காய போடுமாறு அனுப்பி வைக்கின்றார்.

இதன் போது ஈஸ்வரி நான் ஏதும் சொல்லுவேன் என்று உனது மருமகளை அனுப்பி வைக்கிறியா? நான் உன்னிடம் நேராகவே கேட்கிறேன் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? நிலா மட்டும் போதும் என்று எழிலிடம் சொன்னியா? ஏற்கனவே செத்துப்போன உன் புருஷன் வந்து எவ்வளவோ பிரச்சனை பண்ணிட்டான். பிறகும் வந்து கூப்பிட்டால் என்ன செய்வா? என அமிர்தாவை பேசுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement