• Dec 26 2024

தளபதி 69ல் இறுதியாக இணைந்த செல்லம் நடிகர்.. மொத்தமா இறங்கிய கூட்டணி லிஸ்ட் இதோ..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதியின் 69ஆவது  திரைப்படத்தின் சூட்டிங் நாளை மறுதினம் சென்னையில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். மேலும் நாளைய தினம் படத்திற்கான பூஜைகள் சென்னையில் நடைபெற உள்ளதாம்.

தளபதி 69 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடக்க உள்ளதாகவும் இந்த பாடல் காட்சிகளுக்கான ஷுட்டிங் என்றும் படக்குழு சார்பில் அப்டேட்கள் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாகவே விஜயினுடைய திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதிலும் விஜய் நடிக்கும் இறுதிப் படம் இது என்பதால் அதை பற்றி சொல்லவே தேவை இல்லை. பலருக்கு விஜய் சினிமா துறையில் இருந்து விலகப் போகின்றார் என்ற கவலை இருந்தாலும், அவர் அரசியல் ரீதியாக மக்களுக்கு பல நல்ல செயல்களை செய்ய உள்ளார் என்பதை நினைத்து சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.


இவ்வாறான நிலையில் தளபதி 69 கான படத்தின் அப்டேட்டுகள் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த படத்தில் பாபி தியோல்,  மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நரேன், கௌதம் மேனன், பிரியாமணி என அடுத்தடுத்த பிரபல நடிகை, நடிகர்களை அறிமுகப்படுத்தினர்.

இந்த நிலையில், தளபதி 69 படத்தின் இணைந்துள்ள இறுதி நடிகராக பிரகாஷ்ராஜை கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் அவரை செல்லம் நடிகர் என்று அன்புடன் வரவேற்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் ஹாய் செல்லம் என்று த்ரிஷாவை செல்லமாக கூப்பிடுவார். இது பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது அந்த வகையிலேயே தற்போது கேவிஎன் ப்ரொடக்ஷன் பிரகாஷ்ராஜை செல்லம் என செல்லமாக அறிமுகப்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement