• Dec 25 2024

பிக் பாஸில் வெளியேறிய விஷ்ணு தனது வீட்டிற்கு கொண்டு சென்ற முக்கிய பொக்கிஷம்? 104 நாட்கள் என்றா சும்மாவா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும்  ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை.

பிக் பாஸ் தமிழ் 7 இன் இறுதியில் மாயா கிருஷ்ணன், தினேஷ் கோபால்சாமி, விஷ்ணு விஜய், விஜே அர்ச்சனா மற்றும் மணிச்சந்திரா ஆகியோரைப் கிராண்ட் பைனலுக்கு தகுதியாக்கியது. இவர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

எனினும், குறித்த 5 போட்டியாளர்களில் விஷ்ணு விஜய் மட்டும் எவிட் ஆக்கப்பட்டார். ஆனாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.


பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் முதல் நபராக வெற்றி பெற்ற விஷ்ணு, கிராண்ட்  ஃபினாலேயில் முதல் நபராக வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 104 வரை வெற்றிகரமாக பயணம் செய்த விஷ்ணு விஜய்யின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் பிக் பாஸ் தமிழ் 7 இல் தனது பங்கிற்கு ஒரு பெரிய தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு ஒரு எபிசோடுக்கு ரூ. 25 ஆயிரம் வசூலித்துள்ளாராம். மேலும் அவர் 104 நாட்கள் வீட்டில் இருந்தபோது, ​​அவரது மொத்த சம்பளம் ரூ. 26.5 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement