சமூக மற்றும் உணர்வு சார்ந்த திரைப்படங்களுக்கு தனித்துவமான இடத்தை ஏற்படுத்தும் புதிய படம் ‘அரிசி’ தற்போது உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கியுள்ள இந்த படத்தை விவசாயிகளை மையமாக கொண்டு உருவாக்கியுள்ளார்.
‘அரிசி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ளனர். இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர், சமூகப் பிரச்சினைகளிலும், விவசாயியர்களின் உரிமைகளிலும் பங்களிப்பு வழங்கியவர். அவரின் நடிப்பு, கதைக்கு உண்மையான உணர்வையும் வலிமையையும் தருகிறது என படக்குழு கூறியுள்ளது.
மேலும், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் மற்றும் பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு, கதையின் உணர்ச்சி தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா, விவசாயத்தின் பெருமை மற்றும் வாழ்வியலின் அழகுகளை பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவின் தகவலின் படி, பிரபல பாடகர்கள் அறிவு மற்றும் வேடன் தற்பொழுது இணைந்திருப்பதாக படக் குழுவினர் அறிவிப்பு.
இக்கூட்டணி இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!