தமிழில் வெளியான 'சந்திரலேகா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இவர் தற்போது வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றார்.
வனிதா விஜயகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவருடைய தந்தை விஜயகுமார் அவரை தனது குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார். இதனால் வனிதா தனது 2 பிள்ளைகளுடனும் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
இவருக்கு சினிமா வாய்ப்புகள் கை கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார். அதன் பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வனிதாவை தேடிக் குவிந்தன.
அந்த வகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தின் 'சுப முகூர்த்தம்' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். அதில் அவர் திருமண கோலத்தில் மேடையில் பட்டுச்சேலை உடன் இருக்கும் லுக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
மேலும் அதில் மணமகனாக ராபர்ட் மாஸ்டரும் ஜம்முன்னு உட்கார்ந்து இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலித்து பிரிந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் மூலம் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுவதற்கு காரணமாக உள்ளன.
இதே வேளை இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்கும் விதமாக அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டீர்களா? இது 60வது கல்யாணமா என நமது கமெண்ட்களை பண்ணி வருகின்றார்கள்.
Listen News!