• Dec 27 2024

இந்தியன் 2 ஓடாமல் போனதற்கு காரணம் இந்த 4 நடிகர்கள் தானாம்! படுமோசமான தியரி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. 

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக ஓடாமல் போனதற்கு காரணமே அந்த படத்தில் நடித்த நான்கு நடிகர்கள் தான் என தற்போது நெட்டிசன்கள் புதிய தியரியை உருவாக்கி வருகின்றார்கள்.

அந்த வகையில், இந்தியன் 2 படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த சித்தார்த் இந்த படத்தில் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும், சங்கருக்கு முதன்முதலாக தோல்வியை கொடுத்தது பாய்ஸ் படம் தான் என்கின்றனர். மேலும் சித்தார்த் சித்தா படத்தை நடித்துவிட்டு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை அதற்கு முன்னதாகவே நடித்தது தான் அவரது நடிப்பு படத்தில் பெரிதாக எடுபடாமல் போனதற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் சூர்யா நடித்த என்ஜிகே, சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படங்களில் நடித்த போதும், இந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அதே நிலைமை தான் இந்தியன் 2 விற்கும் நேர்ந்தது.


இதைத்தொடர்ந்து பிரியா பவானி சங்கரை  தமிழ் சினிமாவின் ஜெகபதி பாபு என்றே பங்கமாக கலாய்த்து மீம்ஸ் எல்லாம் போட்டு வருகின்றார்கள். அவருக்கு நடிக்கவே தெரியாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார். திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு டம்மி ரோல் போலவே இந்த படத்திலும் நடித்திருக்கின்றார்.

இறுதியாக பாபி சிம்ஹாவை காரணம்சொல்கின்றார்கள் நெட்டிசன்கள். அன்னியன் படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் போசனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சங்கரை அட்லீயாக மாற வைத்துள்ளார். ஒரு சீனில் கூட பிரகாஷ் ராஜுக்கு கிட்ட கூட பாபி சிம்ஹா நடிக்கவே இல்லை.

இவ்வாறு இந்த நாலு பேரை இந்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ண காஸ்டிங் டைரக்டரும் அதற்கு ஓகே பண்ண சங்கரும் அப்பவே நோ சொல்லியிருந்தால் கிரிஞ்சி படமாக இந்தியன் படம் வந்திருக்காது என தற்போது ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement