• Dec 26 2024

இளையராஜா போன்ற மகத்தான கலைஞரை அசிங்கப்படுத்த வாய்ப்பு தேடுகிறார்கள்! இதெல்லாம் சாதி பிரச்சனை !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாகிய இசை கலைஞர்கள் என்றால் வைரமுத்து மற்றும் இளையராஜாவை கூறலாம்.  இவர்களின் காம்போவில் வரும் பாடல்கள் என்றாலே அவை அனைத்தும் மெஹா ஹிட் எனலாம்.


தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் வைரமுத்து ஆவார். இவர் எழுதும் அனைத்து பாடல்களும் தமிழ் வரியை மாத்திரமே கொண்டிருக்கும். அதே போன்றே தமிழில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.  


இவ்வாறு இருக்கும் இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாட்டினால் பேசிக்கொள்வதில்லை பொது மேடைகளில் கூட இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு.இந்த நிலையிலேயே இளையராஜாவை பற்றி வைரமுத்து உட்பட பலர் சமூக ஊடகங்களில் விமர்சிப்பதன் காரணமாக கரிகாலன் இதுகுறித்து பேசியுள்ளார்.


அவர் கூறுகையில் "ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு சாதிய நலன் இருக்கிறது. இளையராஜா குறித்து சர்ச்சைகள் எழும்போதெல்லாம் இத்தகைய சாதி காழ்ப்புணர்வைக் காணமுடிகிறது. எப்போது வாய்ப்பு கிடைக்கும்?இளையராஜா என்கிற மகத்தான கலைஞனை அசிங்கப் படுத்தலாம். காத்திருப்பவர்களின், மலிவான சாதி மனநிலையிலிருந்து உருவாகிற விமர்சனமாகவே இவற்றை அணுக வேண்டும்." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement