தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் அவர் மேற்கொள்ளும் பயணங்கள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதே நேரத்தில், அரசியலுக்கு வந்ததையடுத்து விஜயைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள், இணையத்தில் படம் கசிந்தது போன்ற பிரச்சினைகள் மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த நிலையில், அது ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயும் தந்தை எஸ்.எ.சி சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் அவர் மறைமுகமாக விஜய் சங்கீதா பிரச்சினையைப் பற்றியும் பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், இன்னைக்கு உனக்கு குடும்பம் வேணுமா இல்ல தமிழ்நாட்டு மக்கள் வேணுமா?? அப்படின்னு விஜய்கிட்ட கேட்டா.. எனக்கு தமிழ்நாட்டு மக்கள்தான் வேணும் அப்படின்னு சொல்லுவாரு.. நானும் என்னுடைய மனைவியும் எங்களோட பிள்ளையை தமிழ்நாட்டு மக்களுக்கு தத்து கொடுத்து விட்டோம் என்றார்.
அதே போல எப்பவோ நடந்து முடிஞ்சு கையெழுத்தலாம் போட்டு சமரசமா போன ஒரு விஷயத்தை இப்போ ஊடக வாயிலா கொண்டார வச்சி ரொம்ப அழகா அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். அந்த குணாதிசயங்களை படுகொலை பண்றதுல எதிர்க்கட்சியினர் பிஹச்டி முடிச்சிருக்காங்க. முடிஞ்சு போன ஒரு விஷயம் இந்த நேரத்துல வெளிவருதுனா அதுக்கு என்ன காரணம்?? புரிஞ்சிக்கோங்க.. என்று தெரிவித்துள்ளார்
மேலும் விஜய் இரவு நேரத்தில பிரசாரம் பண்ண ஆசை படுறாரு.. ஆனா ஏன் 6 மணிக்கு மேல் பண்ண மாட்டேங்குறாரு? கரூர் சம்பவம் தான் காரணம்..இருட்டுல தான் எல்லா தப்பும் நடக்குது. எனக்கே கூட்டத்தை பார்க்கும் போது பயமா இருக்கு..பயப்பட வச்சிட்டாங்க.
எல்லாரும் சொல்றாங்க இரவுல பிரச்சாரம் பண்ணுங்கன்னு.. ஆனால் அவர் சிக்கலில் மாட்ட மாட்டாரா என்று எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க என தெரிவித்துள்ளார்.
Listen News!