• Dec 26 2024

தனுஷை பிட்டு பட ஹீரோனு சொன்னாங்க..!! புதிய சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருந்து தற்போது சர்ச்சையின்  நாயகியாக திகழ்பவர் தான் சுசித்ரா. இவர் தொடர்ந்து பல சர்ச்சை பதிவுகளையும் கிசு கிசு தகவல்களையும் வெளியிட்டு வருகின்றார். இவர் சொல்லுவது உண்மையா பொய்யா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு  காணப்படும். இதன் காரணமாகவே ரசிகர்கள் குழம்பி போய் உள்ளார்கள்.

சுசித்ரா பாடகியாக உருவாவதற்கு முன்பே தனியார் வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அங்கு அவரது குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானது. அதன் பின்பு பாடகியாக உருவானார். எனினும் சுசித்ராவின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில ஏற்ற இறக்கங்களால் சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

தமிழ் சினிமாவில் சுசி லீக்ஸ்  என்ற விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கினார். எனினும் அந்த செயலை  தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் செய்ததாக குற்றம் சாட்டினார். அது மட்டும் இன்றி தனது முன்னாள் கணவரும் தனுஷும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இதனால் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கும் தொடர்ந்து உள்ளார்.


இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் நடிகர் தனுஷை தான் எப்போது சந்தித்தேன் என்பதை பற்றி கூறியுள்ளார். அதாவது காதல் கொண்டேன் படம் ரிலீஸ் ஆன போது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மாவுக்கு திரைத்துறை சார்பில் விழா நடத்தப்பட்டது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாட நானும் சென்றிருந்தேன். அப்போது தன்னுடன் வந்த பின்னணி பாடகர்கள், தூரமாக இருந்த தனுஷை பார்த்து காதல் கொண்டேன் (ஆபாச படத்தில்)  நடித்த பையன் அங்கு அமர்ந்திருக்கின்றான் என்று கூறினார்கள்.

உடனே இடைமறித்த தொகுப்பாளர், தனுஷை ஆபாச பட ஹீரோ என கூறினார்களோ அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்றனர். உடனே, பாடகி சுசுத்ராவும் 'சத்தியமாக' எனக் கூறிவிட்டு தொடர்ந்து பேசினார்.

பின்னணி பாடகிகள் அவ்வாறு கூறியதும் 'இது நல்ல செயல் அல்ல' என கூறிவிட்டு தனுசுடன் சுமார் 30 நிமிடங்கள் இருந்து பேசி விட்டு வந்தேன். இதனை நினைவில் வைத்திருந்த அவர் என்னை அவரது படத்தில் பாட வைத்தார். அதன்படி வேங்கை படத்தில் 'உன்னை மட்டும் பிடிக்குது' என்ற பாடலை பாடினேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம் ஆனால் ஒரு சிலரால் விரிசல்  ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement