பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் பங்கு பற்றி வருகின்றனர்.
ஆனால் பார்வதி, கமருதீன் மற்றும் சாண்ட்ரா மோதிக்கொண்டது தான் ப்ரோமோக்களிலும் காட்டி வருகின்றார்கள். மேலும் டாஸ்கின் போது கமருதீனை தாக்கியதுடன் அவர் மீது அநியாயமாக பழி சுமத்தும் பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்து, ஒரு ஆணுக்கு நியாயம் கிடைக்க செய்யுங்கள் என பிக் பாஸ் ரசிகர்கள் குரல் எழுப்பினர்.
ஆனால் பார்வதியின் ஆதரவாளர்கள், கமருதீன் தான் ரொம்ப வயிலன்ட், காதலிக்கும் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாத ஆண், அதனால் அவருக்கு தான் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் காருக்குள் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அடைந்து காணப்படுகின்றனர். இதன்போது இதிலையும் ரொமான்ஸ் பண்ணுவியா என்று விக்ரம், கமருதீனை பார்த்து கேட்கிறார். அதற்கு பார்வதி ஏதோ நாங்க ரொமான்ஸ் பண்ணி சர்வே பண்ணிக்கிறோம் என்று சொல்லுகிறார்.
இதன்போது கேரக்டர் பற்றி கமருதீன் பேச, உன் கேரக்டர் பற்றி எல்லாருக்குமே தெரியும் என்று சாண்ட்ரா சொல்ல, மனசுல இருக்கிறதெல்லாம் வெளியில வருது என்று பார்வதி சொல்லுகின்றார்.
மேலும் பொறுக்கி பாரு என்று சாண்ட்ரா சொல்ல, நீயும் பொறுக்கி தானே என்று கமருதீன் சொல்லுகின்றார். அதற்கு நான் என்ன பொறுக்கி தனமாவா பண்ணி கொண்டு இருக்கிறேன் என்று சாண்ட்ரா கேட்க,
நீ யாரடி என்ன பத்தி பேசுறதுக்கு என்று கமருதீன் சொல்லுகின்றார். மேலும் தைரியம் இருந்தால் துப்புடா என்று சாண்ட்ரா சொல்ல, இவ பெரிய இவ என்று கமருதின் சாண்ட்ராவை திட்டுகின்றார்.
Listen News!