தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று கதாநாயகனாகவும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வரும் சூரி, சமீபத்திய நேர்காணலில் தனது குடும்பம் குறித்து உருக்கமாக பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த நேர்காணலில் சூரி, தனது குடும்ப அமைப்பு குறித்து மனம் திறந்து பேசினார். அதாவது, " நாங்க அண்ணன் தம்பிங்க மொத்தம் 6பேர், மொத்தமா குடும்பத்தில 40 பேர் இருக்காங்க. 40 பேரும் ஒரே குடும்பமா ஒரே வீட்டில ஒத்துமையா இருக்க காரணம் அம்மா தான்.
எங்க எல்லாருக்கும் சாமின்னா எங்க ஆத்தா தான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் யாருமே சண்ட கிண்ட போடாம இருக்கன்னு சொல்லுவாங்க..." என்று தெரிவித்திருந்தார்.
இந்த வார்த்தைகள், அவரது தாயின் மீது கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றன. குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தாயின் ஆசை என்றும் அவர் கூறியிருந்தார்.
Listen News!