• Dec 25 2024

இதுதான் எனக்கு வசதி! அப்படி நான் நடிக்க மாட்டேன்! நடிகை ப்ரியா பவானி சங்கர்

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியலில் நடித்து மேயாத மான் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், ப்ரியாவுக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இவர் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2,டிமான்டி காலனி 2 படங்கள் வெளிவந்தன. இதில், இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால், அதற்குமாறாக டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில், பேட்டி ஒன்றில் ப்ரியா பவானி சங்கர், மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்று கொள்ளமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். மேலும், நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. தற்போது நடிக்கும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement