• Sep 07 2025

தெறிக்கு "கோட்" அப்டேட்! பட்டையை கிளப்பும் டிக்கெட் விற்பனை! எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கோட் திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் தான் சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ட்ரெண்டிங்கான ஒரு விடயமாக காணப்படுகின்றது.  இளையதளபதி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் நாளைய தினம் விநாயகர் சதுஸ்டியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


இந்த படம் சுமார் 5000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அப்பா, மகன் என்னை இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதோடு அதில் மகனாக நடிக்கும் விஜயின் கேரக்டர் மிக இளமையாக காட்டப்படுவதற்காக ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.


கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை வெளியான பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத போதும் இந்த பாடல்கள் அத்தனையும் தியேட்டர்களில்  பார்க்கும்போது திருவிழா போலவே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரேம்ஜி தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், தற்போது கோட் படத்திற்கு இதுவரையில் விற்பனையாகியுள்ள டிக்கெட்களின் விபரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஆகஸ்ட் 30ம் தேதி 36, 360 டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.


ஆகஸ்ட் 31 ஆம் தேதி 54, 740 டிக்கெட்களும், செப்டம்பர் முதலாம் தேதி 2,35,000 டிக்கெட்களும், செப்டம்பர் இரண்டாம் தேதி 2, 34, 250 டிக்கெட்களும், செப்டம்பர் மூன்றாம் திகதி 2, 95, 830 டிக்கெட்களும் விற்பனையாக உள்ளன. இவ்வாறு கோட் திரைப்படத்திற்கு இதுவரையில் மொத்தமாக 8, 59, 180 டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement