• Dec 26 2024

மீண்டும் குட்டையை குழப்பிய ஆர்த்தி.. ஆனால் இம்முறை பச்சைக் கொடி காட்டிட்டாரே.!!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையிலான பிரச்சனைகள் சமீப காலமாகவே வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளன. இதன் காரணத்தினால் சமூக வலைதள பக்கங்களில் பலரும் பலவாறு பேச தொடங்கியுள்ளார்கள். ஆர்த்திக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஜெயம் ரவி இதுவரையில் எந்த கிசுகிசு தகவல்களிலும் சிக்காதவர். அதே போல நடிகைகளுடனும் நடிக்கும்போதும் தனது கண்ணியத்தை பேணுபவர். இதன் காரணத்தினாலே பலருக்கும் ஜெயம் ரவி மீது ஒரு மதிப்பும் மரியாதையும் காணப்படும்.

ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் சிறந்த கணவன் மனைவிகளாக காணப்பட்ட நிலையில், தற்போது இவர்களுடைய வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்தார். ஆனால் அதற்கு பின்பு ஜெயம் ரவி தன்னிச்சையாகவே முடிவெடுத்தார் தன்னிடம் கேட்கவில்லை என்று உருக்கமான பதிவொன்றை ஆர்த்தி வெளியிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஆர்த்தி பக்கத்தில் தான் நியாயம் உள்ளது என அவருக்கு சப்போர்ட் பண்ணினார்கள். ஆனாலும் ஜெயம் ரவி இறுதியாக வழங்கிய பேட்டியில், ஆர்த்தியும் அவரது அம்மாவும் செய்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகவே பேசி இருந்தார். இதனால் ஜெயம் ரவி மீது பரிதாபம் ஏற்பட்டது.


இந்த நிலையில், தற்போது ஆர்த்தி மீண்டும் ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் எமோஷனலாக பேசியுள்ளதோடு மீண்டும் ஜெயம் ரவியோடு இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெயம் ரவி விவாகரத்துக்கேட்டு நீதிமன்றத்தை நாடினார். நான் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்றேன். ஆனால் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சட்டரீதியாக எனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன்,. யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகின்றேன் என எமோஷனலாக பேசியுள்ளார்.

இவ்வாறு ஆர்த்தி மீண்டும் சமாதான கொடியை காட்டி உள்ளதால் அவர் பிள்ளைகளுக்காக என்றாலும் ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement