• Dec 25 2024

கவர்ச்சி குயினின் பிறந்தநாள் இன்று! பிக் பாஸ் ஸ்டார் , ஆனா சொத்துமதிப்ப கேட்டா அசந்துருவிங்க

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஹெலன் நெல்சன் என்ற பெயரில் இந்திய வடிவழகியாக இருந்த இவர் 2010ல் விமல் நடித்த களவாணி என்ற திரைப்படத்தில் ஓவியா என தனது பெயரை மாற்றி தமிழ்த் திரை உலகி்ல் நடிகையாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் மெரினா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்து தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்து பின்பு திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.


தொடர்ந்து வடிவழகி போட்டிகளில் கலந்துகொண்டு இருந்த இவர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.ஆனாலும் இவர் பெரிதும் மக்களால் அறியப்பட்டது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பே ஆகும். இவரது ஒட்டுமொத்த சொத்துமதிப்பு வெறும் 20 கோடி ரூபாய் என்றே கூறப்படுகின்றது. பிக் பாஸ் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் இவரது சொத்துமதிப்பு பலரை ஆச்சரிய படுத்துகின்றது. இவ்வாறு இருக்கும் நடிகை ஓவியா இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.


Advertisement

Advertisement