• Jul 23 2025

1000 குழந்தைகளுக்கு உயிர் வழங்கிய டாப் ஹீரோ... வருசத்துக்கு 30 கோடி நன்கொடை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலக வாழ்வில் பயணித்து வருகின்றார்.

இவ்வாறு தனக்கு கிடைக்கும் கணிசமான வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க பகுதியில் அவர் தொண்டு செயல்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்.

அதன்படி மகேஷ் பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவீதம் நன்கொடையாக வழங்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆண்டுக்கு 25- 30 கோடி ரூபாய் பணத்தை தொண்டு செயல்களுக்கு பயன்படுத்துகின்றார்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொண்டுள்ள மகேஷ் பாபு, சில தொண்ட நிறுவனங்களை அவரே  நடத்தி வருகின்றாராம்.


அதில் ஒன்று ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவுகின்றார். இன்று வரை இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இருதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார்.

இது தவிர அவருடைய மூதாதையர் கிராமம் உட்பட இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அங்கு சாலைகள், மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அனைத்தையும் வழங்கி வருகின்றார்.

Advertisement

Advertisement