• Dec 25 2024

வெளியேறிய போட்டியாளர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வர தயாரா?50வது நாளில் திருப்பம்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

 பிரம்மாண்டமான வரவேற்புடன் பிக்பாஸ்நிகழ்ச்சி தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும்  கடந்த சீசன்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் பரபரப்பான தருணங்கள் குறைந்ததாகவே உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் விறு விறுப்பினை அதிகரிக்க, பிக்பாஸ் குழு பல புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. வைல்ட்கார்டு என்ட்ரியின் மூலம் பலரை வீட்டிற்கு அனுப்பியிருந்தாலும், நிகழ்ச்சியின் அதிரடி இன்னும் பூர்த்தியாகவில்லை.


அதனால், தற்போது பிக்பாஸ் குழு, 50வது நாளில் ஒரு புதிய யுக்தியை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீசனில் வெளியேறியவர்களில் ஒருவரை மீண்டும் வீட்டிற்குள் அனுப்ப, திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான மிகப்பெரிய வாய்ப்பு நடிகர் அர்னவுக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் நிகழ்ச்சி மீண்டும் ரசிகர்களை அதிகமாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பிக்பாஸ் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement