1997 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் தான் ஊர்பி ஜாவேத். இவர் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் இங்கேயே படித்து முடித்துள்ளார். அதன் பின்பு இவருக்கு ஏற்பட்ட மாடலிங் ஆர்வத்தினால் வித்தியாசமான பல முயற்சிகளை செய்தார். மேலும் சின்னத்திரையிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கு பற்றினார். ஆனாலும் எதிர்பாராத விதமாகவே இவர் ஒரு வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அதன் பின்பு தான் ட்ரெண்டிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கதற விட்டு வருகின்றார்.
d_i_a
இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதோடு அதனை வீடியோவாக வெளியிட்டு இணையத்தில் பேசு பொருளாக்குவார். ஆனாலும் இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.
இதனால் தனது கையில் கிடைக்கும் பொருட்களினால் உடை தயாரித்து அதனை சோசியல் மீடியாவில் வெளியிடுவார். இவரின் ஆடைகளை டிசைன் பண்ணுவதற்கு என்றே ஒரு குழு இவருக்காக செயல்படுகின்றது.
இந்த நிலையில், நடிகை ஊர்பி ஜாவேத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் சிகப்பு நிற ஆடையில் பல இடங்களில் பஞ்சர் போட்டது போல புது டிசைனில் ஜொலித்துள்ளார். இதனை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள். தற்போது இவருடைய புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகின்றன.
Listen News!